சுவிட்சர்லாந்தில் நதி ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Moesa நதியிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அண்மையில் மழை வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நபர்களில் ஒருவரது சடலமா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த வாரம் சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 38 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரையில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இன்றைய தினம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையில் காணாமல் போனவர்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே Moesa நதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.