சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூரிச் விமான நிலையத்தின் விமானப் புறப்படுகைகள் ரத்து செய்யப்பட்டதுடன் தரையிறக்கங்களும் பகுதியளவில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கணனிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு விமான நிலையப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சூரிச் விமான நிலையத்தின் விமானங்கள் புறப்படுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுவிஸ் விமான கட்டுப்பாட்டு சேவையை வழங்கும் நிறுவனமான ஸ்கை கயிட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் தடைப்பட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டிலும் ஸைகய்கயிட் சேவை பாரியளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.