டெல்லி விமான நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் கூரை இடிந்து வீழ்ந்த காரணத்தினால் இவ்வாறு பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை வேளையில் முனையத்தின் கூரைப்பகுதி இடிந்து வீழ்ந்ததாகவும் இதனால் வாகனங்கள் பலவற்றுக் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 2.00 மணி வரையில் புறப்பாடு முனையம் 1 இன் (departures Terminal 1) பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக இவ்வாறு விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் இடம்பெற்ற விபத்து காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.