பொலிவியாவில் இடம்பெற்ற அரசியல் சதிப் புரட்சியை முயற்சியை சுவிட்சர்லாந்து கண்டித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பொலிவியாவின் சட்ட ரீதியான அரசாங்கத்தை மலினப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.
பொலிவியாவின் ராணுவத்தினர் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதற்கு முயற்சித்திருந்தனர்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் பிணக்குகளுக்கு வன்முறையற்ற வகையில் தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.
பொலிவியாவில் இடம் பெற்ற ராணுவ சதிப் புரட்சிக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிவியாவில் சுமார் 1000 சுவிட்சர்லாந்து பிரஜைகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.