அயர்லாந்தின் எர் லிங்குஸ் விமான சேவை நிறுவனம் சுமார் 400 விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி வரையில் 122 விமானப் பயணங்களை ரத்து செய்வதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட விமான பயணங்களுடன் மொத்தமாக 400 விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.