சீரற்ற காலநிலை காரணமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளியறங்க நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலை குறித்த முன்னறிவிப்பு காரணமாக இவ்வாறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும், இடி மின்னல் தாக்கம் ஏற்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு திறந்த வெளிகளில் நடைபெறவிருந்த நிகழ்வகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது