சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலமான வருமானம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு இவ்வாறு சுற்றுலாத்துறையில் கூடுதுல் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக நாட்டின் புள்ளிவிபரவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து பிரஜைகள் வெளிநாட்டு பயணங்களுக்காகவும் கூடுதல் தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் 18.4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த தொகையானது கடந்த 2022ம் ஆண்டை விடவும் 12 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுவிட்சர்லாந்து பிரஜைகள் வெளிநாட்டு பயணங்களுக்காக 20.2 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலவிட்டுள்ளனர்.
இந்த தொகையும் கடந்த 2022ம் ஆண்டை விடவும் 12 வீதமாக உயர்வடைந்துள்ளது.