சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறிப்பாக மேற்கு சுவிட்சர்லாந்து பகுதிகளில் இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை, புயல் காற்று மற்றும் இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழையுடன் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் சில கொல்லப்பட்டதுடன் பாரியளவு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.