சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
Collina d’Oro என்னும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்திற்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவருக்கு ஓரளவு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் ஏனைய ஐந்து பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்து காரணமாக குறித்த வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.