சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை காரணமாக மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனின் மாக்கியா வெலி பகுதியில் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுவிஸ் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவில் சிக்குண்ட மேலும் ஒருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை மற்றும் புயல் காரணமாக குறித்த பகுதியில் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.