சுவிட்சர்லாந்தில் முதியவர்கள் விவகாரத்து பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வூதியக் கொடுப்பனவு தொகைகளை அதிகமாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு முதியவர்கள் விவகாரத்து பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலியாக விவாகாரத்து பெற்றுக் கொண்டு இவ்வாறு கூடுதல் தொகை பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விவகாரத்துப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் கூடுதல் தொகை ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
திருமணமான முதியவர்கள், விவகாரத்தான முதியவர்களை விடவும் குறைந்தளவு தொகை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலியான முறையில் விவாகரத்து பெற்றுக் கொண்டு கூடுதல் ஓய்வூதியத் தொகை பெற்றுக் கொள்வதுடன், அவர்கள் ஓரே கூரையின் கீழ் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய ஆண்டுகளில் இவ்வாறு போலி விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருமணமான ஓய்வூதியப் பெறுனர்களை விடவும் விவகாரத்தான அல்லது தனித்து வாழும் ஓய்வூதியப் பெறுனர்கள் 1225 சுவிஸ் பிராங்குகளை கூடுதலாக பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.