ரிக்கினோ கான்டனில் குழாய் நீர் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்கினோ கான்டனின் வெலிமக்கியா பகுதியில் குழாய் நீர் மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கெவியோ, ரோவோனா, வால் பாவானா பகுதி மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பருகுவதற்கும், சமைப்பதற்கும், கழுவுவதற்கும் குழாய் நீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக நீர் நிலைகள் மாசடைந்துள்ளதாகவும் இதனால் குழாய் நீரை பயன்படுத்தும் போது அவதானமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.