சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம், இடி மின்னல் மற்றும் புயல் காற்று போன்றவற்றினால் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சீரற்ற காலநிலை குறிப்பாக மண் சரிவு காரணமாக சுவிட்சர்லாந்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரிக்கினோ மற்றும் வாலாயிஸ் கான்டன்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிவாரணங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் பாலங்கள் உடைந்துள்ளதுடன் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.