பிரான்ஸ் தேர்தலின் எதிரொலியாக சுவிஸ் பங்குச்சந்தையில் சாதகமாற்றம் பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து பங்குச்சந்தையில் இன்றைய தினம் ஆரம்ப கொடுக்கல் வாங்கல்களில் சாதகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இவ்வாறு பங்குச்சந்தையில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளது.
தீவிர வலதுசாரி கட்சி பிரான்ஸ் தேர்தலில் முன்னணி வகித்த போதிலும் பிரான்சின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் தேர்தல் நீண்ட காலத்திற்கு நீதிச் சந்தைகளில் தாக்கத்தை செலுத்தாது என விபி வங்கி தெரிவித்துள்ளது.
நிதி கொள்கைகள் மிகவும் முதன்மையானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்சில் தேர்தல் காரணமாக சந்தை நடவடிக்கைகள் ஓரளவு முடங்கி இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்த காரணத்தினால் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.