பிரான்ஸில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி கட்சியான far-right National Rally (RN) கட்சி முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் சுற்று வாக்கெடுப்பில் மேரின் லீ பென் தலைமையிலான நெசனல் ரெலி கட்சி முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெசனல் ரெலி கட்சி 33.2 வீதமான வாக்குகளைப் பெற்றும் எனவும், இடதுசாரி கட்சி 28.1 வீத வாக்குகளையும், ஜனதிபதி இமெனுவல் மெக்ரோனின் கட்சி 21 வீத வாக்குகளைப் பெற்று முன்றாம் இடத்தினையும் வகிக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நெசனல் ரெலி கட்சி, ஏதிலிகள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளை உடைய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தீவிர வலதுசாரி கொள்கைகளை உடைய நெசனல் ரெலி கட்சி இந்த தேர்தலில் வெற்றியீட்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.