சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து சுவிட்சர்லாந்து அரசியல்வாதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு போன்ற காரணிகளினால் சில கான்டன்களில் பாரியளவு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ரிக்கினோ மற்றும் வலாயிஸ் கான்டன்களில் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து கால்பந்தாட்ட அணியினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கால்பந்தாட்ட அணியினர் தற்பொழுது யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.