பிரான்ஸின் தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவுக் கொள்கை குறித்த நிபுணர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான பிரான்ஸின் தேர்தல் முடிவுகளானது, ஐரோப்பாவுடன் சுவிட்சர்லாந்து மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தேர்தலில் லி பென் தலைமையிலான வலதுசாரி முன்னிலை வகிக்கின்றது.
சுவிட்சர்லாந்திற்கும் பிரான்ஸிற்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில், வாழ்ந்து வரும் வெளிநாட்டுப் பிரஜைகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையைக் கொண்ட நாட்டவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் அதிகளவாக வாழ்ந்து வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் ஜெர்மனியர்களாவர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்து விவகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.