சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டில் கருக்கலைப்பு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 12045 கருக்கலைப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 11,374 கற்கலைப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆயிரம் பெண்களில், 7.3 என்ற அடிப்படையில் கருக்கலைப்புகள் பதிவாகியுள்ளதாகவும் 15 முதல் 44 வயதான பெண்கள் மத்தியில் இந்த கருப்பு கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
15 முதல் 19 வயதான இளம் தலைமுறை மத்தியில் கருக்கலைப்பு சம்பவங்கள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் 12 வாரங்களில் அதிகளவான கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.