சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோடை காலத்தில் பல நாடுகளில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சுவிட்சர்லாந்திலும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும் இது பெருந்தொற்று காலப் பகுதி போன்று பாரிய நோய்த் தொற்று தாக்கம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
KP.2 மற்றும் KP.3 ஆகிய உப திரிபுகள் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தொற்றாளர்களில் 70 வீதமானவர்கள் இந்த புதிய இரண்டு உப திரிபுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய திரிபுகளினால் பாரிய சுகாதார கேடுகள் கிடையாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்த் தொற்று தாக்கத்தினால் மருத்துவமனை அனுமதிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.