பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.
கெயர் ஸ்டாமர் தலைமையிலான தொழிற்கட்சி 412 ஆசனங்களைப் பெற்று தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
14 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் நீடித்த குடியரசுக் கட்சி வெறும் 121 ஆசனங்களை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளது.
லிபரல் ஜனநாயகக் கட்சி 71 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மொத்தமாக 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றில் தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, குடியரசு கட்சியின் தலைவர் ரிஷி சுனக் கட்சித் தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
பிரதமர் என்ற வகையில் சுனக் இறுதியாக பக்கிங்ஹாம் மாளிகைக்கு விஜயம் செய்துள்ளார்.
சுனக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பிரித்தானியாவின் அரச மாளிகையான பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.
ரிஷி சுனக்கின் ராஜினாமாவை மன்னார் மூன்றாம் சார்ள்ஸ் எற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கட்சியின் ஸ்ட்ராமர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.