இலங்கைக்கான விமானப் பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கட்டார் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் தற்பொழுது நாளாந்தம் ஐந்து விமான சேவைகள் முன்னெடுப்படுகின்றன.
இந்த எண்ணிக்கை நாளாந்தம் ஆறு என்ற எண்ணிக்கையில் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி முதல் விமானப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
போயிங் 787 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் இதில் 30 இருக்கைகள் வர்த்தக வகுப்பு இருக்கைகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் விமான சேவை இலங்கைக்கு வாராந்தம் 42 விமான சேவைகளை முன்னெடுக்க உள்ளது.