சுவிட்சர்லாந்தில் மகனை மீட்பதற்கு முயற்சித்த சவூதி அரேபிய பிரஜை ஒருவரும் அவரது மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பேர்ன் கான்டனின் இன்டர்லேகன் பகுதியில் அமைந்துள்ள கீஸ்பாச் நீர் வீழ்ச்சியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவ விஞ்ஞானி டொக்டர் அப்துல்லா அல் எனாஸி என்பவரும் அவரது இரண்டு வயது மகனும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக அப்துல்லா கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் புகைப்படம் எடுத்துக் கொணடிருந்த வேளையில் பிள்ளை தவறி நீரில் வீழ்ந்துள்ளதாகவும், பிள்ளையை காப்பாற்ற தந்தை நீரில் குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் விஞ்ஞானியும் அவரது மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.