பயணி ஒருவரின் மோசமான செயல் காரணமாக அமெரிக்க விமானமொன்று அவசரமாக திசை திருப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான சேவை நிறுவனமொன்றின் விமானமொன்று இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் விமானத்தில் அந்தரங்க உறுப்பினை பயணிகளுக்கு காண்பித்து, விமானத்தின் இருக்கைகளுக்கு நடுவில் அமைந்துள்ள நடைபாதை பகுதியில் சிறுநீர் கழித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்படைய குற்றச்சாட்டில் 25 வயதான நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
என்வோய் எயார் விமான சேவை நிறுவனத்தின் 3921 விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிக்காகோவிலிருந்து மான்செஸ்டர் நோக்கிப் பயணம் செய்த விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது நியூயோர்க்கின் பவலோ நயகரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனையும் 5000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.