வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ளப்படும் கடன்களை மறுசீரமைப்பதற்கு தனியான நிறுவனமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடன் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
அரசாங்கத்தின் பிரதான ஐந்து நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு புதிய சட்டமூலமொன்று முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பொரளாதார மாற்றச் சட்டத்தின் ஊடூக கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதார ஆணைக்குழு மற்றும் தேசிய செயற்திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதியின் ஊடான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.