தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்ட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உடல் தகனம் செய்யப்பட்டது.
சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், தமது இரங்கல்களையும் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டுள்ளார்.
சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற காரணத்தினால் திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு முன்னனெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திருகோணமலை நகர் முழுதும் குறித்த பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளனர்.