சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் மூலம் முதலீடுகளை செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலியான பிரபலங்கள் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக குறுகிய காலத்தில் கூடுதல் லாபம் ஈட்ட முடியும் என பிரச்சாரம் செய்து இவ்வாறு ஏமாற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜப்பான், இந்தியா, சில்லி, கொலம்பியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
InvesaCapital என்ற முதலீட்டு திட்டத்தின் கீழ் முதலீடு செய்து 21,000 சுவிஸ் பிராங்குகளை இழக்க நேரிட்டதாக சுவிட்சர்லாந்தின் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக கடமையாற்றி வரும் ஸ்டஃபண்ட் பாஸ் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலத்திற்குப் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை கண்டறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து, கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என விளம்பரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் மக்களின் பணம் மோசடி செய்யப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னணி பிரபலங்கள் பலர் இந்த முதலீட்டு திட்டத்துடன் தொடர்பட்டு இருப்பதாகவும், லாபமீட்டிஉள்ளதாக காண்பித்து மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே சுவிட்சர்லாந்து மக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.