சுவிட்சர்லாந்தில் ஏதிலிகள் தொடர்பில் புதிய அணுகுமுறை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசாங்கம், கான்டன்கள், நகரங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கூட்டாக இணைந்து ஏதிலி அந்தஸ்து வழங்குவது தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலி அந்தஸ்து வழங்கும் நடைமுறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி புதிய சட்ட மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
எவ்வாறெனினும், ஏதிலி அந்தஸ்து வழங்கும் நடைமுறை மீள்பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.