தென் கொரியரவிற்கு பயணம் செய்து கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். 470 ரக விமானமே இவ்வாறு கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திரும்பியுள்ளது.
இன்றைய தினம் மாலை 6.31 மணிக்கு புறப்பட்ட விமானம், சுமார் இரண்டு மணித்தியால பயணத்தின் பின்னர் இவ்வாறு மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பிய விமானம் பழுதுபார்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வேறும் புதிய விமானமொன்று இரவு 10.15 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தென் கொரியாவிற்கு பயணம் செய்யும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பல விமானங்கள் இவ்வாறு அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.