யூரோ கிண்ண காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறும் என இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இங்கிலாந்து அணியுடனான காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து கடுமையாக போராடி இறுதியில் தோல்வியடைந்துள்ளது.
காலிறுப் போட்டியை கண்டு களிப்பதற்கு சூரிச், பேசல், பேர்ன், ஜெனீவா, ரிக்கினோ உள்ளிட்ட பல இடங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியிருந்தனர்.
போட்டியின் 75ம் நிமிடத்தில் சுவிஸ் வீரர் எம்போலோ கோல் ஒன்றை போட்டார் பின்னர் போட்டியின் 80ம் நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சாகா கோல் ஒன்றை போட்டார்.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட போட்டி நேரத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டியை நிறைவு செய்தன.
பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி உதைகளில் இங்கிலாந்து அணி ஐந்துக்கு மூன்று என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்து கொண்டது.