ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த நிதியாண்டில் 73.3 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.
கடந்த 2022-2023ம் நிதியாண்டில் இவ்வாறு நட்டமடைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-2022ம் நிதி ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது கடந்த நிதியாண்டின் நட்டம் குறைவடைந்துள்ளது.
சுமார் 56 வீதத்தினால் நட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2022-2023ம் நிதி ஆண்டுக்கான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் வருமானம் 372.5 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட அதிகரிப்பின் அடிப்படையில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்யும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.