இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்டிய புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், பிரபல தமிழ் மற்றும் சிங்களப் பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட ஆறு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
கே.சுஜீவா சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.