குற்றத்தை ஒப்புக்கொள்ளும் போயிங்

Must Read

உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

போயிங் 737 மெக்ஸ் விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பில் அதில் பயணித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகளின் போது போயிங் நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

மேலும், 243.6 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கு 455 மில்லியன் டொலர் முதலீடு செய்யவும் போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

விமான உற்பத்தியின் போது அதன் தரம் குறித்து மூன்றாம் தரப்பு பரிசோதனை செய்வதற்கு அனுமதிப்பதாகவும் இணங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இரண்டு போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருந்ததுடன் 346 பயணிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

243.6 மில்லியன் டொலர் அபராதம் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு 2.5 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.