சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆர்கெவ் கான்டனின் Spreitenbach AG பகுதியில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆர்கெவ் கான்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துரித கதியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தைச் சேர்ந்த மக்கள் அந்த பகுதியை விட்டு அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.