சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் புத்தர் சிலைக்குள் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பேர்ளினிலிருந்து இந்த நபர் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 13 கிலோ கிராம் எடையுயுடைய கிடமைன் மற்றும் ஒரு கிலோ கிராம் எம்.டி.எம்.ஏ ஆகிய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த போதைப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் பேசல் நகர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தரின் தலைப் பகுதியைக்கொண்ட சிலையொன்றில் இவ்வாறு கூடுதல் அளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது.