ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கும் மனு தள்ளுபடி

Must Read

ஜனாதிபதியின் பதவிக் காலத்தைஒத்தி வைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்த மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ, பிரித்தீ பத்மன் சூரசேன, S.துரைராஜா ஆகியோர் ஆராய்ந்தனர்.

முதலில் சட்ட வியாக்கியானம் கோரி மனு தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் முதல் மனுவில் மேலும் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.