பிரான்சில் நடைபெற்ற முடிந்த பொது தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள தவறியுள்ளது.
முதல் சுற்று வாக்கெடுப்பில் வலதுசாரி தேசிய கட்சி, முன்னணி வகுத்து வந்தது.
எனினும் இரண்டாம் சுற்று தேர்தலில் முடிவுகளின் போது நஷனல் ரலே என்ற வலதுசாரி கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறியுள்ளது.
இதன்படி அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் என்எஸ்பி கூட்டணி (New Popular Front) கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி இமெனுவல் மெக்ரோன், centrist Ensemble கூட்டணி தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
மெக்ரோன் அண்மையில் திடீரென தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்திருந்தார்.
இந்த தேர்தலில் முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னணி வகித்த நேஷனல் ரலே கட்சி இரண்டாம் சுற்று தேர்தல் முடிவுகளின் போது மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
மூன்று கட்சிகள் தேர்தலில் குறிப்பிட்ட அளவு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் எந்த ஒரு தரப்பிற்கும் பெரும்பான்மை பலம் கிடையாது.
எனவே எந்த ஒரு தரப்பினாலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலைமைகள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இதுவரையில் இவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக சந்தையின் நிலைமைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் பொதுத் தேர்தலின் அதிகாரபூர்வ முழு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும்.