நாட்டில் மின்சாரக் கட்டணம் 30 வீதத்தினால் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி முதல் இந்த கட்டணத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கட்டண குறைப்பு தொடர்பில் கருத்துக்கள் கோரப்பட்டு, பரிந்துரைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் மின்சாரக் கட்டணத்தை குறிப்பிடத்தக்களவில் குறைக்க முடியும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.