இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை விஸ்தரிக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை 7 பில்லியன் டாலர்கள் எனவும் 2030ஆம் ஆண்டு அளவில் இது 30 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆடம்பர பொருட்களுக்கான சந்தை விஸ்தரிப்பானது சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் பிரதான ஏற்றுமதி பொருட்களில் ஒன்றான கைக்கடிகார உற்பத்திகளை கூடுதல் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆடம்பர கைக்கடிகார கைத்தொழியத்துறையில் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியாவிற்கு கூடுதல் அளவில் ஆடம்பர கைக்கடிகாரங்களை ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுவிட்சர்லாந்தின் கைக்கடிகார உற்பத்தியின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.