செயற்கை நுண்ணறிவு தொழில்களை பாதிக்காது என சுவிட்சர்லாந்து மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இன்று உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக தொழில்களை இழக்க நேரிடும் என மக்கள் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள் செயற்கை நுண்ணறிவு ஊடாக தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடாது என கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பியன்ஏ.ஐ. பாரோமீடற்றர் என்ற அமைப்பினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், சுமார் 82 வீதமான பணியாளர்கள் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உள்ளனர்.