அரசாங்கம் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மேலும் விஸ்தரித்துள்ளது.
இன்றைய தினம் இந்த தடைவிதிப்பு குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ரஷ்ய அரசாங்கம் உக்ரையின் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் தடைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைவிதிப்புகளுக்கு அமைவாக சுவிட்சர்லாந்தும் தடைகளை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 69 பேருக்கும் 47 நிறுவனங்களுக்கும் எதிராக மேலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள், ரஷ்யா தொடர்பில் சாதக பிரச்சாரம் செய்வோர், ராணுவ படையினர், நீதிமன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீது இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ரஷ்ய ஆயுத நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சுவிட்சர்லாந்து தடைகளை அறிவித்துள்ளது.