டெல்டா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்றில் பழுதடைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் சுகவீனமுற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழுதடைந்த உணவை உட்கொண்ட சில பயணிகள் சுகவீனமுற்ற காரணத்தினால் விமானம் அவசரமாக திசை திருப்பப்பட்டுள்ளது.
டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான Delta Flight 136 விமானத்தில் பயணம் செய்தவர்களே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகனின் டெட்ரோயிட்டில் புறப்பட்ட விமானம், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நியூயோர்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு பழுதடைந்த உணவுளை வழங்கியமைக்காக விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பழுதடைந்த உணவை உட்கொண்டு உபாதைக்கு உள்ளான 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் மொத்தமாக 270 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் இதில் எத்தனை பேர் பழுதடைந்த உணவுகளை உண்டனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.