ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகவும் சிறந்த புத்தாக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாக்கம் குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புத்தாக்க முயற்சிகளில் முன்னணி வகிக்கும் நாடாக தென்கொரியா தெரிவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் 27 நாடுகள் மற்றும் ஏனைய 11 ஐரோப்பிய நாடுகள் என்பனவற்றில் மிகவும் சிறந்த புத்தாக்க திறன் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய புத்தாக்கம் என்ற அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் புத்தாக்க முயற்சிகளில் முன்னிலை வசிக்கின்றன.
சுவிட்சர்லாந்து புத்தாக்க ஆய்வு முயற்சிகளுக்கு மிகவும் சாதகமான நாடாக கருதப்படுகின்றது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கலாநிதி பட்டக் கற்கைகளுக்காக வருகை தரும் மாணவர்களுக்கு சிறந்த இடமாக சுவிட்சர்லாந்து திகழ்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.