சுவிட்சர்லாந்தில் சைக்கிளில் பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
சைக்களில் பணிக்கு செல்லுதல் என்னும் திட்டத்தின் ஊடாக 109090 பேர் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் பணிக்கு சென்றுள்ளதாகவும் இதனால் சுமார் நான்காயிரம் தொன் எடைடைய கார்பனை வெளியீட்டை தவிர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் இணைந்து கொண்டவர்கள் 28 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தை சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இது 696 தடவை உலகை சுற்றி வருவதற்கு நிகரான தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் 12 வீதமானவர்கள் மேலதிகமாக இணைந்து கொண்டுள்ளனர்.