சுவிட்சர்லாந்தில் தீவைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரிச் கான்டன் போலீசார் குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சூரிச் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு தீவைப்பு சம்பவங்களுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் குறித்த பெண்ணை போலீசார் கைது செய்திருந்தனர்.
தீ வைப்பு சம்பவங்களுடன் தமக்கு தமக்கு தொடர்பு உண்டு என போலீசாரிடம் இந்தப் பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.