சுவிட்சர்லாந்தில் மாணவிகள் பக்கச்சார்பான அடிப்படையில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மாணவ மாணவியரின் திறன் குறித்த மதிப்பீடுகளின் போது இவ்வாறு பக்கச் சார்பான அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்கலைக்கழகங்களான பேர்ன் மற்றும் ஜூரிச் பல்கலைக்கழகங்களினால் இது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி மாணவர்களின் திறமை குறித்த தரப்படுத்தல்களின் போது சில காரணிகளின் அடிப்படையில் அவர்களுக்கான மதிப்பாய்வு பெறுபேறுகள் வழங்கப்படுகின்றன என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
குறிப்பாக புறத்தோற்றம், பால்நிலை, சமூக அந்தஸ்து போன்ற காரணிகள் மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதில் தாக்கத்தை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பால்நிலை, உடல் எடை, இனம் சமூகப் பொருளாதாரப் பின்னணி போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த மெலிவான உடல் தோற்றத்தைக் கொண்ட பெண் பிள்ளைகளுக்கு கூடுதலான பக்க சார்பு காண்பிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சரியான முறையில் மதிப்பாய்வுகளை செய்வதில்லை என மாணவர்களின் திறனை விடவும் வேறும் காரணிகளையும் கருத்தில் கொண்டே புள்ளிகளை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்தமாக ஆண் மற்றும் பெண் மாணவர்களினால் செய்யப்பட்ட ஒரே ஆவணம் மதிப்பாய்விற்காக சமர்ப்பித்த போது, பெண் பிள்ளைக்கு 5 புள்ளிகளும் ஆண் பிள்ளைக்கு 4 புள்ளிகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.