உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் விமான நிறுவனத்தின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களை போன்று அல்லாது தற்பொழுது விமான நிறுவனத்தின் விற்பனை பாரியளவு சரிவினை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் போயிங் நிறுவனம் மூன்று பயணிகள் விமானத்தை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ் ரக மூன்று விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த மாதம் 14 புதிய விமானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இதில் அநேகமானவை சரக்கு விமானங்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் விமான நிறுவனத்தின் விற்பனையானது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 70 வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் விற்பனையானது 95% வீழ்ச்சி அடைந்துள்ளது.
அலஷ்கா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்றில் எற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து போயிங் விமான விற்பனையானது சடுதியான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.