உலகின் செல்வந்த மக்களைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் செல்வ செழிப்பான சனத்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
UBS வங்கியினால் வெளியிடப்பட்ட யூ.பி.எஸ் குளோபல் வெல்த் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உலக செல்வந்தர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
சர்வதேச ரீதியில் செல்வந்தவர்களின் எண்ணிக்கை 4.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பணவீக்கம் காரணமாக செல்வத்தில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
குறிப்பாக அன்னிய செலாவணி வீதத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் இந்த செல்வந்தர்கள் தொடர்பிலான தரப்படுத்தலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
சுவிட்சர்லாந்தில் தனிநபர் ஒருவருடைய சராசரி செல்வம் 638012 சுவிஸ் பிராங்குகளாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தபடியாக லக்சம்பெர்க் இரண்டாம் இடத்தையும், ஹாங்காங் மூன்றாம் இடத்தையும் முறையே பெற்றுக்கொண்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் மொத்தமாக 1054 மில்லியனாதிபதிகள் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட சொத்துக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.