சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான காற்று மற்றும் மழை வீழ்ச்சி தொடர்பில் அதி உயர் அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நாளைய தினம் முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மோசமான காலநிலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டிக்கினோ கான்டனில் குறிப்பாக கூடுதல் அளவில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை பருவ காலம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக மழை குளிருடனான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களிலும் மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படும் எனவும் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது