சுவிட்சர்லாந்தில் வெள்ளம் காரணமாக சுமார் 200 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாத நடுப் பகுதி முதல் சூறாவளி காற்று மற்றும் கடுமையான மழை வெள்ளம், மண்சரிவு போன்ற காரணிகளினால் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு 200 மில்லியன் பிராங்குகள் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து காப்புறுதி ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெலாயிஸ் மற்றும் ரிக்கினோ ஆகிய கான்டன்களில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காப்புறுதி செய்யப்படாத சேதங்கள் இதில் மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவ்வாறு உள்ளடக்கப்பட்டால் சேதம் மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.