சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் போக்குவரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டு ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது கூடுதலான எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 2.81 மில்லியன் பயணிகள் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்தி போக்குவரத்து செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 8 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு முன்னைய கலத்துடன் ஒப்பீடு செய்யும்போது இது மூன்று வீத வீழ்ச்சி என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு போக்குவரத்தில் ஈடுபட்ட 1.96 மில்லியன் பேர் உள்ளூர் பயணிகள் எனவும் 0.84 மில்லியன் பேர் வெளிநாட்டு பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் சூரிச் விமான நிலையத்திற்கு கூடுதல் எண்ணிக்கையிலான விமானங்கள் வந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது.